இன்று வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழக்கூட்டத்தின் பின்னர் மாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம். எ சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று காலை 10மணி முதல் இடம்பெற்ற மத்திய குழுக்கூட்டத்தில் முக்கிய சில விடயங்கள் கூடி ஆரயப்பட்டுள்ளனர் முக்கியமாக அரசியலமைப்பு நடவடிகக்கை குழுவினாலே முன்வைக்கப்பட்ட இடைக்கால அறிக்கை சம்பந்தமான விவாதம் அரசியலமைப்புப் பேரவையிலே நடந்திருப்பதன் பின்னணியிலே அந்த விடயங்கள் தொடர்பாகவும் காலையிலே நீண்டநேரம் நாங்கள் கலந்துரையாடியிருந்தோம்.

இதிலே சொல்லபப்ட்ட வியடங்கள் எவ்வகையான விடயங்கள் என்பதைப்பற்றி நாங்கள் கலந்துபேசியிருந்தோம். இது இடைக்காலத்திலே வெளிவந்திருக்கின்ற ஒரு அறிக்கை இது ஒரு வரைவு அல்ல இறுதியிலே வந்த அறிக்கையுமல்ல இடைக்காலத்திலே வந்திருக்கின்ற ஒரு அறிக்கை அது சம்பந்தமாக சில சில முன்மொழிவுகள் நாட்டினுடைய சுபாவத்தைப்பற்றி ஆட்சி முறையைப்பற்றி அதிகாரப்பகிர்வைப்பற்றி இதிலே சொல்லப்பட்டிருக்கின்ற முன்னேற்றகரமாக விடயங்கள் பல அவதானிக்கப்பட்டன.

சில விடயங்கள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றது என்பது இந்த அறிக்கையிலே வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த இடைக்கால அறிக்கைக்குப்பிறகு வருகின்ற வழிநடத்தல் குழுவிலே இன்னமும் இணங்காமல் இருக்கின்ற அல்லது இணக்கம் காணப்படவேண்டிய விடயங்கள் சம்பந்தமாகவும் கட்சியின் உறுப்பினர்கள் வழிநடத்தல் குழுவிலே என்னமாதிரியாக அந்த வியடங்களைக்கையாளவேண்டும் என்ற விடயங்கள் முன்வைக்க்பட்டிருக்கின்றன. அதேவேனைளயிலே இந்த இடைக்கால அறிக்கையிலே எங்களுடைய கட்சியின் கொள்கையோடு இணங்கின பல முற்போக்கான விடயங்கள் வெளிவந்திருக்கின்ற போதிலும் இது சரியான விதத்திலே மக்களைச் சென்றடையவில்லை என்ற ஆதங்கம் பல கட்சி உறுப்பினர்களாலே எங்களுக்கு எடுத்து இயம்பப்பட்டது விஷேடமாக கட்சிக்கு வெளியாலே இருந்துகொண்டு வருகின்ற விமர்சனங்களும் இன்றைக்கு ஊடகங்களிலே பரவாலகச் சொல்லப்ட்டிருக்கின்ற சில விமர்சனங்களும் அதாவது ஒற்றையாட்சிக்கு இணங்கி விட்டார்கள் ஒரு உதாரணம் அறிக்கையிலே சொல்லப்ட்டிருக்கின்றது.

இலங்கைக்கு ஒற்றையாட்சிக்கு பொருத்தமற்றது என்று அப்படி தொளிவாகச் சொல்லப்ட்டிருக்கின்றபொதிலேயும் பல விமர்சனங்கள் ஒற்றையாட்சிக்கு இணங்கிவிட்டார்கள் என்றதாக இருக்கின்றது. ஆகவே அது ஒரு உதாரணம் அப்படியான பொய்யான பரப்புரைகளை மக்கள் நம்பாமல் வெளிவந்திருக்கின்ற அறிக்கையை சரியான விதத்திலே மக்கள் மத்தியே எடுத்து செல்வதற்கான நடவடிக்கைளை கட்சி எடுக்கவேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களும் கேட்டுக்கொண்டார்கள். தங்கள் தங்கள் மாவட்டங்களுக்கு வந்து இது சம்பந்தமான விழிப்புணர்வுக்கூட்டங்கள் வைக்கவேண்டும் என்று கேட்டிருந்தார்கள்.

ஏற்கனவே பல தொகுதிகளிலே தொகுதிவாரியாக இப்படியான சில கூட்டங்கள் நடாத்தப்பட்டிருக்கின்றது. இன்றைய கூட்டத்திலே நாங்கள் விஷேடமாக கிழக்கு மாகாணத்திலே ஒவ்வொரு மாவட்டத்திலே கட்சி உறுப்பினர்களுக்கு சரியான நிலைமையை விளங்கப்படுத்தும் கூட்டங்கள் சிலவற்றை ஒழுங்கு செய்துள்ளோம்.

பிற்பகல் வேளையிலே வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எவ்வாறு சந்திக்கவேண்டும் என்பது குறித்து ஆராய்ந்திருக்கின்றோம். புதிய தேர்தல் முறைமை சம்பந்தமாக பல தெளிவுபடுத்தல் அவசியமாக இருந்தது ஏற்கனவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அங்கத்தவக்கட்சிகள் மூன்று யாழ்ப்பாணத்திலே சந்தித்து சில முன் நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம்.

அதைத் தொடர்ந்து மாவட்ட மட்டங்களிலே சில சந்திப்புக்களை நடாத்தி என்னவிதமாக நாங்கள் சேர்ந்து போட்டியிடுவது என்ற முடிவுகள் எடுக்கப்பட்டவேண்டி இருக்கின்றது. அது சம்பந்தமாக ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் அந்த மாவட்டத்தினுடைய சூழ் நிலையை அனுசரித்து பல கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து தமிழரசுக்கட்சியினுடைய அரசியல் குழு இது சம்பந்தமான முடிவுகளை வருங்காலத்தில் எடுக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது. என்று மேலும் தெரிவித்துள்ளார்.

 

791 Total Views 3 Views Today
  • 48
  •  
  •  
  •  
  •  
    48
    Shares

Comments

comments