கொய்யாபழம் பறிக்கச் சென்ற 6 வயது சிறுவன் சடலமாக மீட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

போகாவத்தை தோட்டத்தைச் சேர்ந்த தரம் 1 கல்வி பயிலும் 6 வயதுடைய ராஜேந்திரகுமார் அஷ்வின் என்ற சிறுவனே இன்று (12.11.2017) காலை போகாவத்தை ஓயவில் சடலமாக மீட்டுள்ளனர்

நேற்று (11.11.2017) மாலை 5 மணிமுதல் வீட்டிலிருந்த சிறுவன் காணாமல் போன நிலையில் உறவினர்களும் தோட்டமக்களும் தேடுதலில் ஈடுட்டனர்.
இதன்போது குறித்த சிறுவன் வீட்டின் அருகிலுள்ள போகாவத்தை ஓயாவில் சடலமாக காணப்பட்டுள்ளான்.

சடலத்தைக் கண்ட பிரதேசவாசிகளும் உறவினர்களும் திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

இதையடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார் கொய்யாபழம் பறிக்கச் சென்ற போது தவறி ஆற்றில் வீழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

அட்டன் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பாவையிட்டப்பின் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கவுள்ளதாகவும் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணையை தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

177 Total Views 2 Views Today
  • 6
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

Comments

comments