வவுனியாவில் நீண்ட நாட்களாக அகற்றப்படாமலிருக்கும் பதாதைகள்

வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகள் இன்று வரையும் அகற்றப்படவில்லை
கடந்த மாதம் 21ஆம் திகதி வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் ஜனாதிபதி நடமாடும் சேவை இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் ஒருவரின் படத்துடன் கூடிய பதாதை வவுனியாவில் பிரபல்யமான விருந்தினர் விடுதியை வைத்திருக்கும் ஒருவர்; பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் நிற்கும் படத்தினை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் நிகழ்வு இடம்பெற்று பல நாட்கள் கடந்தும் இப்பதாதைகள் அவ்விடத்திலிருந்து அகற்றப்படவில்லை. இது தொடர்பாக தொடர்பு பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தவும்.

எனவே ஜனாதிபதி, பிரதமர் கலந்துகொள்ளும் இவ்வாறு நிகழ்வுகள் இடம்பெறும் சில தினங்களுக்கு மட்டுமே வைக்கப்படவேண்டும் ஆனால் இது பல நாட்கள் கடந்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

636 Total Views 1 Views Today
  • 49
  •  
  •  
  •  
  •  
    49
    Shares

Comments

comments