வவுனியா வேலையற்ற பட்டதாரிகளுக்கிடையே கலந்துரையாடல்

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் 2013-2016 ஆண்டுக்கான இணைப்பாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் வவுனியா குடியிருப்பு பூங்காவில் நேற்று (12.11) இடம்பெற்றது.

இதன் போது தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் பட்டதாரிகளுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் தொடர்பான விண்ணப்பங்கள் கோரப்பட்டு பல மாதங்கள் கடந்தும் இதுவரை நியமனம் தொடர்பான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

உள்ளூராட்சி தேர்தலிற்கான அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில் தேர்தலிற்கு முன் எமக்கான நியமனங்களை வழங்குதல் வேண்டும் எனவே எதிர்வரும் (15.11) புதன்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்வதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் நிர்வாக தலைமைகள் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு முழு ஆதரவு வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டது.

எனவே வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் (15-11) அன்று காலை 6:30 மணிக்கு வவுனியா அரச பேருந்து நிலையத்தில் ஒன்றுகூடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். என வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

499 Total Views 1 Views Today
  • 61
  •  
  •  
  •  
  •  
    61
    Shares

Comments

comments