இலங்கை கராத்தே சம்மேளனம் நடத்திய தேசிய கராத்தே சுற்றுப் போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த மாணவி, கனேந்திரன் சதுர்த்தியா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இலங்கை தேசிய கராத்தே சுற்றுப்போட்டி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பாடசாலை மட்டத்தில் மாவட்ட ரீதியில் தேர்வுசெய்யப்பட்ட நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் தேசிய பாடசாலையைச் சேர்ந்த 6ஆம் வகுப்பில் கல்விபயிலும் கனேந்திரன் சதுர்த்தியா மாணவி தங்கப்பதக்கம் வென்றார்.

ஏற்கனவே வடமாகாண கராத்தே சுற்றுப் போட்டியிலும் இவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

1293 Total Views 30 Views Today
  • 214
  •  
  •  
  •  
  •  
    214
    Shares

Comments

comments