கஞ்சாவுடன் இளைஞன் பேருந்து நிலையத்தில் கைது.

வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் நேற்று (13.11) மதியம் 1.30 மணியளவில் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணத்திலிருந்து மொனறாகலை நோக்கி பேருந்தில் பயணித்த பயணி ஒருவரின் பயண பொதியினை வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் பொலிசார் சோதனை மேற்கொண்டபோது மொனறாகலையை சேர்ந்த டி.வி.ரி.டர்ஷன் (வயது-27) என்பவரை 2கிலோ 155கிராம் கஞ்சாவினை சட்டவிரோதமாக கொண்டு செல்லமுற்பட்டபோது சந்தேகத்தின் பேரில் பொலிசார் பயணியின் பயணப்பையினை சோதனை மேற்கொண்டபோது கஞ்சா கடத்தும் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

கஞ்சாவுடன் குறித்த நபரையும் கைது செய்து பொலிசார் நீதிமன்றத்தில் முன்நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

489 Total Views 2 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments