வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பேரணி.

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள், கணவன்மார்களை மீட்பதற்கு ஜ.நா வில் குரல் கொடுக்கும் சர்வதேச நாடுகளுக்கு நன்றி தெரிவித்தும் , அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் இன்று (14.11) மதியம் 12.30 மணியளவில் வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே 264வது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைதிப்பேரணியில் ஈடுபட்டனர்.

வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய அமைதிப்பேரணி பஜார் வீதியூடாக ஹொரவப்பொத்தானை வீதியினை வந்தடைந்து ஹொரவப்பொத்தானை வீதியுடாக கண்டி வீதியினை வந்தடைந்து ஏ9 வீதியுடாக சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பு ஈடுபடும் இடத்தினை வந்தடைந்து பேரணியை நிறைவு செய்தனர்.

இதன் போது வவுனியா கானாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி என கூறிக்கொள்ளும் ஜெயவனிதா என்பவர் தமிழ் அரசியல் கைதிகளை “தமிழ் போர் குற்றவாளிகள்” என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார் இது பலர் மனங்களிலும் சர்ச்சையை உண்டுபண்ணியுள்ளது எனினும் இவர் வாய் தவறுதலாக உலரியுள்ளாரா என்ற சந்தேகமும் வலுக்கின்றது எனினும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பொறுப்பான இடத்திலிருந்து கொண்டு இவ்வாறு கருத்து தெரிவிப்பது என்பது ஏற்கமுடியாத ஒன்று என பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்

 

1412 Total Views 4 Views Today
  • 71
  •  
  •  
  •  
  •  
    71
    Shares

Comments

comments