வவுனியாவில் இயங்கிவரும் பிரபல மகளிர் கல்லூரியில் டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார வைத்திய அதிகார பணிமனை அறிவித்துள்ளது

மேலும் குறித்த கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிகள் பலரும் காய்ச்சல் காரணமாக வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் மூன்று மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் சுகாதார வைத்திய அதிகார பணிமனை குறித்த மகளிர் கல்லூரியினை சோதனையிட்ட பொழுது அங்கு பாடசாலை அதிபரினால் வாகனங்களின் டயர்களை கொண்டு பூச்செண்டுகள் வைத்து பராமறிக்கப்பட்டு வருவதனால் அதனுள் நீர் தேங்கி டெங்கு நுழம்பு உற்பத்தியாகியுள்ளது இதனாலேயே மாணவிகள் பாதிக்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது

குறித்த கல்லூரி அதிபரை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர் இதேவேளை ஆண்கள் பாடசாலை ஒன்றிலும் டெங்கு நுழம்பு பரவும் அபாயம் காணப்பட்டு எச்சரித்துள்ளனர் என்றும் சுகாதார வைத்திய அதிகார பணிமனை தெரிவித்துள்ளது

4353 Total Views 2 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments