வவுனியா மகாறம்பைக்குள கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட உடையார் கரம்பன் என்று அழைக்கப்படும் சிறிய நீர்பாசனக்குளம் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினரால் முற்றுமுதாக அழிக்கப்பட்டு

ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக மகாறம்பைக்குள கிராம அபிவிருத்திச் சங்கத்தினால், வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவிப் பணிப்பளாளருக்கு 16.10.2017 அன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்குளம் சுமார் 20 ஏக்கர் விஸ்தீரனம் கொண்டதாகவும், 50 ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர்பாசன வசதிக் கொண்ட இக் குளம் அழிக்கப்பட்டதினால் மழைகாலங்களில் வெள்ளப்பெருக்கினால் தமது கிராமம் பாதிக்கப்படுவதாகவும், குளத்துக்கு அருகாமையில் உள்ள பிரதான பாதை ஒவ்வொருவருடமும் மழைகாலத்தில் அழிவதினால் அதை மறுசீரமைப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகும். மகாறம்பைக்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம் குற்றம் சாட்டியது.

உதவிப் பணிப்பாளருக்கு வழங்கிய புகார் கடிதம் பின்வருமாறு

உதவிப்பணிப்பாளர்,
கமநல அபிவிருத்தித் திணைக்களம்
வவுனியா.

ஐயா!

மேற்படி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் சார்பாக இத்தகவலை தங்களின் பார்வைக்கு தருகின்றோம்.

No automatic alt text available.No automatic alt text available.

மேற்படி மகாறம்பைக்குளம் கி.அ.சங்கம் இல. 1 மேற்குப் பிரிவில் புளியடிப்பிள்ளையார் வீதிக்கு தெற்கு பக்கமாக குளம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இக்குளத்திற்கு மகாறம்பைக்குளம் தெற்கைச் சார்ந்த அகத்தியர் வீதி, மதுரைவீரன் வீதி, பாடசாலை வீதி ஆகிய பகுதிகளில் இருந்து மழைகாலத்தில் வருகின்ற மழைநீர் சேகரிக்கபட்டு குளத்திற்கு வடக்குப் பக்கமாக விவசாயக் காணிகளில் சிறுபோக வேளாண்மை செய்யப்பட்டு வந்தது இங்குள்ள விவசாயப் பெருங்குடி மக்களுக்கு தெரிந்த விடயாகும். இது இளம் தலைமுறையினருக்கு உரிய தகவல்கள் தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது.

சமீப காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பிரச்சினையால் 1996ம் ஆண்டளவில் மக்கள் இடம்பெயரவேண்டிய சூழ்நிலையால் பலர் இடம் பெயர்ந்துள்ளனர்.

Image may contain: tree, plant, grass, sky, outdoor and nature

இங்கு முன்னேற்படாக வந்தவர்களில் ஒரு சிலர் இக்குளத்தின் அணைக்களை நீர்மூலமாக்கி அதை வயல் போல மாற்றி அமைத்துள்ளார்கள். மழைக் காலங்களில் பாய்ந்துவரும் மழைநீரானது தங்க இடமில்லாமல் வீதியை ஊடறுத்து மேவிப்பாய்ந்து அங்கிருக்கும் வீடுகளுக்குள் செல்வதால் மக்கள் பெரும் துயரம் அடைகிறார்கள். பெரும் எடுப்பில் பாய்ந்துவரும் மழை நீரானது வீதிக்கு மேலாய் பாய்வதால் வீதியூடாகப் போக்குவரத்துக்கு மக்கள், பாடசாலை மாணவர்கள் சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

Image may contain: tree, sky, grass, plant, cloud, outdoor and nature

அத்துடன் பயிர்களுக்கு பாரிய சேதம் ஏற்படுகின்றது. என்பதையிட்டு விவசாயிகள் கவலைப்படுகின்றார்கள். எனவே இது சம்பந்தமாக விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் எதுவித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. எனவே இது சம்பந்தமாக விவசாயிகளின் நலன் கருதி குளத்தை மீளப்புணரமைத்து விவசாயத்திற்குரிய செயற்பாட்டிற்கு வழிசமைத்துக் கொடுக்க வேண்டும் என விவசாய மக்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

Image may contain: sky, grass, plant, tree, cloud, outdoor and nature

அத்துடன் மழைநீர் வீதிக்கு மேலால் பாய்ந்து செல்வதால் மண் அரிப்பு ஏற்படுகின்றது. இதனால் இவ்வீதியை செப்பனிட வருடாந்தம் பல ஆயிரம் ரூபாய்கள் செலவிட வேண்டியிருக்கிறது என்பதனை தெரிவிக்கினறோம்.

நன்றி…

உரிய நடவடிக்கைக்ககாக

பிரதிகள் :
அரசாங்க அதிபர்
பிரதேச செயலாளர்
விவசாய அமைச்சர் வடமாகாணம்

Image may contain: sky, tree, plant, grass, cloud, outdoor and nature

2490 Total Views 4 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments