வவுனியாவிற்கு புதிதாக கடமையேற்று வந்துள்ள அரச அதிபர் ஓர் சிங்கள மொழி சேர்ந்தவர் என்பது யாவரும் அறிந்ததே

எனினும் இதுவரை காலமும் மாவட்ட செயலகத்தால் அமைக்கப்பட்ட பதாதைகள் அனைத்துமே மும் மொழிகளிலும் அமைந்திருந்ததன

ஆனால் இம்முறை புதிதாக மன்னார் வீதியில் கச்சேரிக்கு முன்பாக உள்ள படலையருகில்(பிரதேச செயலகம் மற்றும் கச்சேரிக்கும் இடையில்) தனி சிங்கள மொழியிலான பதாதை ஒன்று வைக்கப்பட்டுள்ளது தமிழர் அதிகம் வாழும் பிரதேசத்தில் தனி சிங்கள மொழியிலான பதாதை வைத்திருப்பது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது

உடனடியாக இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா…?

இதேவேளை மாவட்ட செயலகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நீர் விநியோக கட்டிடத்திலும் தனி சிங்கள மொழியிலான கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இவை அனைத்துக்கும் பொறுப்பாக உள்ளவர் ஜனாதிபதியின் இணைப்பாளர் சமிந்த வாசல என்பதும் குறிப்பிடத்தக்கது எதுவாக இருப்பினும் மாவட்ட செயலகத்தினூடாக இவை இடம்பெற்றிருப்பதால் உரிய நடவடிக்கையை மேற்கொள்வாரா புதிய அரச அதிபர்…?

1356 Total Views 7 Views Today
  • 99
  •  
  •  
  •  
  •  
    99
    Shares

Comments

comments