வவுனியாவில் பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து அவதூறு பரப்பி செய்தி வெளியிட்ட ஊடகத்திற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழங்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்குள் அத்துமீறி உள் நுழைந்து பாடசாலை பற்றிய அவதூறு பரப்பி செய்தி வெளிட்ட பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் அதன் செய்தியாளருக்கும் எதிராக வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஓமந்தை பிரிவிற்குட்பட்ட மகிழங்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்குள் கடந்த வியாழக்கிழமை பாடசாலை முடிவுற்ற பின்னர் மாலை 3.30மணிக்கு வெள்ளை கார் ஒன்றில் சென்று தொடர்ச்சியாக பாடசாலைச்சமூகத்திற்கு எதிராக செயற்பட்டு வரும் நபர் ஒருவருடன் பாடசாலையின் வேலியைப்பிரித்து உட் சென்ற குறித்த ஊடகத்தின் ஊடகவியலாளர் பாடசாலையிலுள்ள பௌதீக வழங்கள் தொடர்பாகவும் கட்டடத்தின் தன்மைகள் தொடர்பாகவும் வேறு பாடசாலையில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களை சீருடையில் அழைத்துச் சென்று அவர்களின் பாடசாலையின் கழுத்துபட்டியை அகற்றிவிட்டு குறித்த பாடசாலையின் செய்தியினை அவ் மாணவர்களை வைத்து பதிவு செய்துகொண்டுள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் குறித்த பாடசாலையின் செய்தியினை குறித்த தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து பாடசாலையின் அதிபர் நேற்று ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் குறித்த செய்தியாளருக்கு எதிராகவும் செய்தி நிறுவனத்திற்கு எதிராகவும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான செய்தி வெளியிட்டுள்ளதால் தனது கடமைக்கு அவதூறு ஏற்பட்டுள்ளதாகவும் எனது கௌரவத்திற்கும் பாடசாலையின் கௌரவத்திற்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது எனவும் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார். இவ்வாறான செய்தியால் மாணவர்கள், பெற்றோர்கள் மன உழைச்சலுக்குள்ளாகியுள்ளனர். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார். குறித்த முறைப்பாட்டினை அடுத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து இன்று குறித்த செய்தி வெளியிட்டுள்ளதற்கு எதிராக பாடசாலையில் ஒன்றிணைந்த பாடசாலையின் அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து கண்டனம் தெரிவித்ததுடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிபருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைக்கான கட்டிடம் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்டு 2016ஆம் ஆண்டு பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2152 Total Views 6 Views Today
  • 165
  •  
  •  
  •  
  •  
    165
    Shares

Comments

comments