வவுனியா பொது நூலகத்தின் வாசிப்பு மாத பரிசளிப்பு விழா

வவுனியாவில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வவுனியா பொது நூலகத்தினால் மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட சித்திரப்போட்டி, சிறுகதை, கவிதை. கட்டுரை நடாத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று வவுனியா கலாச்சார மண்டபத்தில் காலை 9.30மணியளவில் வவுனியா நகரசபைச் செயலாளர் திரு. ஆர். தயாபரன் தலைமையில் பரிசளிப்பு விழா இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா தேசியகல்வியற்கல்லூரியின் ஓய்வு நிலை பீடாதிபதி திரு. குமாரசாமி சிதம்பரநாதன், தமிழ் மணி அகளங்கன் கௌரவ விருந்தினர்களாக திரு. க. சத்தியசீலன் வவுனியா வடக்கு பிரதேச சபைச் செயலாளர், வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி பாக்கியநாதன் கமலேஸ்வரி, வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பிரிவு அதிபர் திருமதி. தியாகசோதி யுவராஜா,ஊடகவியலாளர் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன் நகரசபையின் வருடந்த நூல் வெளியீடும் இடம்பெற்றது. நகரசபையில் ஓய்வு பெற்றவர்கள் கௌரவிப்பு இடம்பெற்றதுடன் திறமையாக செயற்பட்ட ஊழியர்களுக்கும் கௌரவிப்பு வழங்கப்பட்டது. கலை நிகழ்வுகள், பட்டிமன்றம், விஷேட தேவைக்குட்பட்ட மாணவர்களின் கலை நிகழ்வகளும் இடம்பெற்றது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வல்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

351 Total Views 3 Views Today
  • 57
  •  
  •  
  •  
  •  
    57
    Shares

Comments

comments