யாழ்ப்பாணம் – மீசாலை பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் புதிய தகவல் வெளிவந்துள்ளது.

இதுவரை யாழ்ப்பாணத்தில் ஏதேனும் வாள்வெட்டுச் சம்பவங்கள் நடைபெற்றால் ஆவா குழு, தாரா
குழு போன்ற குழுக்கள்தான் காரணம் என்று கூறப்பட்டது.

எனினும் இதில் ஆவா குழுவின் தலைவர் என கூறப்படும் “சன்னா” என்பவர், கோப்பாயில்
பொலிஸாரை வெட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் சிறையிலிருந்து தப்பிச் சென்ற காரணத்தினால் குற்றவாளியாக
இனங்காணப்பட்டு அவருக்கு ஒன்றரை வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன் நின்று விடாமல், பொலிஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில், ஆவா குழுவின் உளவாளி
உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருந்து புதிய தகவல் ஒன்று
வெளிவந்துள்ளது.

அதாவது இந்த சம்பவத்தை மேற்கொண்டவர்கள் “அஜித் குழு” என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அஜித் குழு யாழ். சாவகச்சேரியில் இயங்கிவருவதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து
வரும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – மீசாலை பிரதேசத்தில் நேற்று இரவு 8 மணியளவில் இரு இளைஞர்கள் மீது
சரமாரியாக வாள்வெட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதில், 20 வயதான செல்வராஜ் கஜீவதன் மற்றும் 17 வயதான அல்பட் அலெக்ஸ் ஆகிய இருவ​ருமே
தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

314 Total Views 1 Views Today
  • 19
  •  
  •  
  •  
  •  
    19
    Shares

Comments

comments