மன்னார், கத்தோலிக்க திருச்சபையில் செயற்பட்ட போதகர்கள் மற்றும் அருட்சகோதரிகள் 15 பேரின் சடலங்களே இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் – தலைமன்னார் வீதியிலுள்ள மயானத்திலுள்ள கல்லறையில் புகைப்பட்டிருந்த 15 சடலங்கள் நேற்று மாலை தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.மன்னார் நீதவான் ஏ.ஜி.எலெக்ஸ் ராஜாவின் முன்னிலையில் இந்த சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.மன்னார் கத்தோலிக்க திருச்சபையினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய குறித்த சடலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளன.இந்த மயானம் கிறிஸ்தவர்களை புதைக்கும் நிலப்பரப்பாக உள்ளது. இங்கு அனைத்து கத்தோலிக்கர்களின் சடலங்களும் புதைக்கப்பட்டுள்ளன.எனினும், பத்து வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட கத்தோலிக்க திருச்சபை போதகர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் சடலங்கள் தனியாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கல்லறையில் மீண்டும் புதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

288 Total Views 3 Views Today
  • 14
  •  
  •  
  •  
  •  
    14
    Shares

Comments

comments