வவுனியா ஓமந்தையில் 16வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் சந்தேகத்தில் ஒருவர் கைது

வவுனியா ஓமந்தை பகுதியிலுள்ள 16வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா ஓமந்தை மாளிகை நொச்சிக்குளம் கனிஷ்ட உயர்தரம் பாடசாலையை சேர்ந்த 16வயதுடைய சிறுமியின் வீட்டிற்குச் சென்று நல்லுறவுடன் பழகிய அப்பாடசாலையின் ஆசிரியரான வவுனியா தோணிக்கள் பகுதியை சேர்ந்த 50 வயதுடைய குமாரசிங்கம் இந்திரசிங்கம் என்ற ஆசிரியரே  இவ்வாறு 16வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் மாணவி வயிற்று வலி என வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை குறித்த மாணவி கர்ப்பம் என அறியவந்துள்ளதை அடுத்து கடந்த 29.11.2017 அன்று ஓமந்தை பொலிஸாரிடம் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தும் நேற்றைய தினம் குறித்த மாணவியின் வாக்குமூலத்தையடுத்தும் சந்தேக நபரான ஆசிரியரை இன்று அதிகாலை தோணிக்கள் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளார்

இரண்டாம் இணைப்புக்கு

வெளியானது வவுனியாவில் மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் விபரம்!

 

4181 Total Views 11 Views Today
  • 163
  •  
  •  
  •  
  •  
    163
    Shares

Comments

comments