கொழும்பு, மருதானை பிரதேசத்தில் மனைவி சீதனம் வழங்காமையினால் கணவன் வித்தியாசமான தண்டனை வழங்கிய தகவல் வெளியாகியுள்ளது.

மருதானையை சேர்ந்த யுவதிக்கும் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கும்
திருமணம் நடைபெற்றுள்ளது.

இதன்போது 20 இலட்சம் ரூபாய் சீதனம் வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ளனர். பெற்றோரின்
ஆசிர்வாதத்திற்கமைய இந்த திருமணம் இடம்பெற்றுள்ளது.

எப்படியிருப்பினும் திருமணம் நடத்து சில நாட்கள் கடந்த பின்னரும் எதிர்பார்த்த சீதனம்
கிடைக்காமையினால் மனைவியிடம் அந்த பணத்தை கேட்டு கணவன் மோதலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தொடர்ந்து மனைவியை துன்புறுத்திய போதிலும் அந்த பணம் கிடைக்காமையினால் கத்தி ஒன்றை
எடுத்து வந்த கணவன் மனைவின் நீளமாக முடியை கட்டையாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார்.

இது தொடர்பில் மனைவியினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய
மருதானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

1865 Total Views 1 Views Today
  • 55
  •  
  •  
  •  
  •  
    55
    Shares

Comments

comments