கடந்த 2001ம் ஆண்டு மார்கழி 07 ம் திகதி வவுனியா வைரவர்புளியங்குளத்தில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவர்களான ஜூட் கசன் மற்றும் சாந்தன் ஆகியோரின் 16வது வருட நினைவுதினம் வைரவர்புளியங்குளத்தில் உள்ள யங்ஸ்ரார் விளையாட்டு கழகத்தினரால் அனுஷ்டிக்கப்படுகிறது

கடந்த 2001ம் ஆண்டு இதே திகதியில் தனது பிறந்த தினத்தை கொண்டாடிக்கொண்டு லொறியில் பயணித்த வேளையில் வைரவர்புளியங்குளத்தில் வைத்து வாகனத்தை மறித்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இவர்களின் நினைவு தினத்தையொட்டி ஜூட்கசன் ,சாந்தன் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்றை வருடாவருடம் யங்ஸ்ரார்  விளையாட்டு கழகத்தினரால் நடாத்தப்பட்டு வருகிறது இதனடிப்படையில் இன்று  அணிக்கு 11பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி வைரவர புளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

1256 Total Views 5 Views Today
  • 103
  •  
  •  
  •  
  •  
    103
    Shares

Comments

comments