வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியத்தில் குடும்ப ஆட்சி நிலவும் நிலை : தாதிய பரிபாலகர் குணசீலனின் இடமாற்றத்ததை ரத்து செய்

பருத்துறையில் தாதிய பரிபாலகராக பணிபுரியும் திரு.குணசீலன் அவர்களை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்ய வேண்டாமேன வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினால் வைத்தியசாலையின் பணிப்பாளர் , வடமாகாண சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் ஆகிய நாம் தெரிவிப்பது தற்சயம் யாழ்ப்பாண மாவட்டத்திலிலுள்ள பருத்துத்துறை ஆதார வைத்தியசாலையில் தாதிய பரிபாலகராக கடமையாற்றிவரும் திரு.குணசீலன் அவர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யவுள்ளதாக அறிகின்றோம்.

எமது வைத்தியசாலையினை பொறுத்த வரையில் தாதிய பரிபாலகர்கள் போதியளவில் உள்ளனர். என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். தற்சமயம் குறித்த பரிபாலகரின் துணைவியாரும் , சகோதரியும் எமது வைத்தியசாலையின் தாதிய பரிபாலகராக கடமையாற்றி வருகின்றனர்.

அத்துடன் திரு.குணசீலன் தாதிய பரிபாலகராக கடமையாற்ற அனுமதிக்கப்படுமாயின் ஒர் குறித்த தாதிய பரிபாலகர்களது அலுவலக அறையில் கணவன், மனைவி, சகோதரி என குடும்பமாக கடமையாற்றுவது எமது தாதிய உத்தியோகத்திற்கு ஆரோக்கியமான விடயமாகாது.

குறித்த நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய சமயத்தில் வைத்தியர்கள் , தாதியர்களுக்கிடையே நல்லுறவானது சிதைக்கப்பட்டு நாளிற்கு நாள் வைத்தியர்கள், தாதியர்களுக்கிடையே முருகல் நிலை ஏற்பட்டு நோயாளர் பராமரிப்பை சரிவர வழங்க முடியாததால் நோயாளர்கள் பாதிப்படைந்தனர்.

அத்துடன் வவுனியா தாதியர் கல்லூரிக்கு வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள், விஷேட வைத்திய நிபுனர்கள் இவருடைய முரண்பாடான செயற்பாடுகள் மற்றும் தாதிய பணிப்புறக்கணிப்பு என்பவற்றால் கல்வி கற்பிக்க செல்லாது புறக்கணித்தனர்.

நோயாளர் பராமரிப்பில் வைத்தியர்கள் , தாதியர்களின் நல்லுறவானது மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. குறித்த நபர் மீண்டும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இடமாற்ற செய்யப்பட்டு வரும் சமயத்தில் இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் தொடருமேன நாம் அச்சத்திலுள்ளோம். தற்சமயம் வைத்தியர் , தாதியர்களிடையேயான உறவானது சீராக நன் நிலையில் காணப்படுகின்றது. இதன் மூலம் நோயாளர் பராமரிப்பானது திறன்பட அமைக்கின்றது.

எனவே இவரின் இடமாற்றத்தினை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ வைத்தியர்கள் சங்கத்தினரும் இவரின் இடமாற்றத்தினை ரத்துச் செய்ய கோரி ஆதரவு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞானசீலன் குணசீலன் அவர்களிடம் தொலைபேசியுடாக தொடர்பு கொண்ட போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை

வவுனியா மாவட்ட வைத்தியசாலை சீரான முறையில் தற்போது இயங்கி வருகின்ற நிலையில் இவரின் இடமாற்றத்தின் மூலம் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகின்றது. உரிய அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு….

குறிப்பு-இது தொடர்பான மாற்று கருத்தை தெரிவிக்க விரும்பினால் எமது இணையத்தில் உள்ள தொடர்பு இலக்கத்தை தொடர்பு கொண்டால் பதிவேற்ற தயாராக உள்ளோம் என்பதையும் அறிந்த்தருகிறோம்-நன்றி தமிழ் தேசிய செய்திகள் 

 

2354 Total Views 9 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments