பீகார் மாநிலம் கயா மாவட்டத்தின் பரையா கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவ் தாஸ். 15 வயது சிறுவனான இவன் இங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான்.

இவனது மூத்த சகோதரன் சந்தோஷ் தாசுக்கும் ரூபி தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்திருந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சந்தோஷ் தாஸ் சமீபத்தில் இறந்து விட்டார்.

எனவே ரூபி தேவியை கொழுந்தனான மகாதேவ் தாசுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் இதில் மகாதேவுக்கு துளியும் விருப்பமில்லை.

எவ்வளவோ எடுத்து கூறியும் கேட்காமல் பெற்றோர் கோயிலில் வைத்து கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.இதனால் மனமுடைந்த மகாதேவ் 2 மணி நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டான். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

1486 Total Views 3 Views Today
  • 36
  •  
  •  
  •  
  •  
    36
    Shares

Comments

comments