வவுனியாவில் பாலியல் தொழில் காரணமாக இந்த வருடம் மாத்திரம் 20 பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்ட வைத்திய கலாநிதி கு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

எயிட்ஸ் நோயின் பாதிப்பு தொடர்பாக இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

வவுனியாவில் கடந்த காலத்தை விட தற்போது எயிட்ஸ் நோய் பரவுவதற்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் நடைபெறும் பாலியல் தொழிலே காரணமாகும்.

வவுனியாவில் இவ்வாறான பாலியல் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் 2, 766 பேர் எயிட்ஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதில் வவுனியாவில் 20 பேர் இந்நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் வைத்திய கலாநிதி கு.சந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

2537 Total Views 4 Views Today
  • 83
  •  
  •  
  •  
  •  
    83
    Shares

Comments

comments