சிறீ தமிழீழ விடுதலை இயக்கம் (சிறீரெலோ) கட்சியானது இலங்கை சுதந்திர கட்சியின் அங்கத்துவ கட்சியாக இன்றைய தினம் ஒப்பந்தம் கைச்சாத்து இடப்பட்டுள்ளது

இன்று(28.12.2017) கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி தலமையில் இடம்பெற்ற இலங்கை சுதந்திர கட்சியின் பங்காளி கட்சிகளின் மாநாட்டில் சிறீரெலோ கட்சி உட்பட ஈழமக்கள் ஜனநாயக கட்சி,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் பிரபாகனேசன் தலமையிலான கூட்டணி கட்சி உட்பட 31கட்சிகள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளனர்

இந்த ஒப்பந்தங்களை ஜனாதிபதியின் கைகளினால் கூட்டு கட்சிகளின் தலமைகளுக்கு வழங்கப்பட்டன மேலும் இந்நிகழ்வில்  மீன்பிடி நீர்வள அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பொதுச் செயலாளருமான அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன் இன்னும் பல பிரதான அமைச்சர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும் இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி “நாட்டின் பலமும் கிராமத்தின் பலமும் சுதந்திரத்துக்கே..” என்ற தொணிப்பொருளில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை கை சின்னத்திலும் சில பகுதிகளில் வெற்றிலை சின்னத்திலும் தேர்தலை எதிர்கொண்டு கிராமங்களில் அபிவிருத்தியை உண்டு பண்ணுவோம் என்று கூறியிருந்தார்

2189 Total Views 2 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments