நாளை இரவு 12மணி முதல் வவுனியா நகர் பழைய பேருந்து நிலையம் மூடப்படுவதாக வடக்கு மகாண முதல்வர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்

சர்ச்சைக்குறிய வவுனியா பேருந்து நிலையத்தின் பிரச்சினை பற்றி நேற்றைய தினம் யாழில் வடமாகாண முதல்வர் தலமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில் வடக்கு மாகாண முதல்வர் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்

இக்கலந்துரையாடலில் வவுனியா நகரசபை செயலாளர்,சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா மாவட்ட தலமை பொலிஸ்நிலைய பொருப்பதிகாரி,தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் செயலாளர் , இ.போ.சபையின் வடமாகாண ஆணையாளர் மற்றும் வவுனியா சாலையின் முகாமையாளர் என பலரும் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில் இறுதி முடிவாக வவுனியா பழைய பேருந்து நிலையத்தை 31.12.2017 இரவு 12மணியுடன் மூடுமாறு வவுனியா நகரசபை செயலாளர் திரு தயாபரன் அவர்கட்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்

மேலும் நகரசபை செயலாளரின் நடவடிக்கைகளுக்கு பொலிஸாரை துனை நிக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்

இது தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளரை தொடர்பு கொண்ட பொழுது வடக்கு மாகாண முதல்வரின் உத்தரவின்படி நாளை இரவு 12மணி முதல் இ.போ.ச பேருந்துக்கள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திற்கு சேவைகளுக்காக செல்ல வேண்டும் எனவும் அதற்குறிய நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்

2785 Total Views 2 Views Today
  • 199
  •  
  •  
  •  
  •  
    199
    Shares

Comments

comments