வவுனியாவின் சர்ச்சைக்குறிய பேருந்து நிலைய பிரச்சினையினையடுத்து வடக்கு மாகாண முதல்வரின் அதிரடி உத்தரவிற்கு அமைய இன்று நள்ளிரவுடன் வவுனியா பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டுள்ளது

01.01.2018 நள்ளிரவு 12மணியுடன் இந்த உத்தரவு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை செயலாளர் அறிவித்துள்ளார்

மேலும் பேருந்து நிலையத்தின் இரண்டு பக்க நுழை வாயில்களும் பரல்கள் கொண்டு வாகனங்கள் உட்செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது

இதேவேளை நாளைய தினம் வர்த்தகர்கள் மற்றும் இ.போ.ச ஊழியர்களும் பாரிய போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறியப்படுகிறது

இன்றிலிருந்து வவுனியா நகரில் புதிய பேருந்து நிலையத்தை தவிர வேறு எந்த பகுதிகளிலும் பேருந்துக்கள் தரித்து நிற்பதற்கு தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

1787 Total Views 3 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments