வவுனியா வெங்கலச்செட்டிகுளம் உள்ளூராட்சி தேர்தல் வட்டாரத்தில் 2018 உள்ளூராட்சி தேர்தலுக்கான ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு கடந்த 31.12.2017  இடம்பெற்றுள்ளது

செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியில் இடம்பெற்ற இந்திகழ்வானது சிறீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு ப.உதயராசா தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் செட்டிகுளம் தொகுதியில் சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தலும் கலந்துரையாடலும் இடம்பெற்றது

மேலும் இந்நிகழ்வில் உரையாற்றிய ப.உதயராசா அவர்கள்

இந்த தேர்தலானது உங்களின் கிராமத்தை நீங்களே அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்வதற்கான தேர்தல் அதற்காகவே உங்கள் கிராமத்திலிருந்து ஒருவரை தெரிவு செய்து அவரை நாம் எம்மூடாக பிரதேச சபைக்கு அனுப்பி உங்கள் கிராமத்தை அபிவிருத்தி அடைய செய்வோம் என்றதுடன்

இது தேர்தல் காலம் பல கட்சிகளும் பல பரப்புரைகளுடன் வருவார்கள் உதாரணமாக நாம் 2009ல் நகரசபை தேர்தலில் களம் இறங்கிய போதிலிருந்து இன்றுவரை கூறுவது அபிவிருத்தி என்ற பாதையையே ஆனால் இன்று தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதை புரிந்து கொண்டிருக்கிரது அன்று எமக்கு எதிராக செயற்பட்ட கூட்டமைப்பு இன்று நாம் கூறியதை சரி என்று அதை தாம் கூறிக்கொண்டு வாக்கு கேட்டு வருகிறது  இப்பொழுதாவது புரிந்து கொண்டது வரவேற்கத்தக்கது ஆனால் இவர்கள் அபிவிருத்தியை செய்வார்களா என்பதை 4 வருடமாக மாகாணசபையில் என்ன அபிவிருத்தியை செய்துள்ளார்கள் என்பதை வைத்து மக்கள் அறிவார்கள் அத்துடன் இந்த தேர்தல் சர்வதேசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு என்பார்கள்…இது ஓர் வரலாற்று பதிவு என்பார்கள் அவர்கள் கூறுவது போல இத் தேர்தல் பெரிய தேர்தல் என்றால் சம்பந்தர் ஐயாவை பதவியை இராஜினாமா செய்து விட்டு இந்த தேர்தலை கேட்கலாமே ? எனவே இப்படியான பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் எனவும் உதயராசா தெரிவித்தார்

வெங்களச் செட்டிகுளம் பிரதேச சபை தேர்தலுக்கான சுதந்திர கட்சியின் வேட்பாளர்களை சிறீரெலோ கட்சியின் சார்பிலேயே தெரிவு செய்யப்பட்டனர் என்பதும் குறிபிடத்தக்கது

1184 Total Views 4 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments