வவுனியாவில் பேருந்து நிலைய பிரச்சினையால் வவுனியா நகர் சில நாட்களாக பதற்றமான சூழ்நிலையில் காணப்பட்டது

அத்துடன் பழைய பேருந்து நிலையம் கடந்த 31.12.2017 முதல் முதல்வரின் உத்தரவிற்கமைய வவுனியா நகரசபையால் மூடப்பட்டிருந்தது மேலும் இலங்கை போக்குவரத்து சபை பணி பகிஷ்பரிப்பில் ஈடுபட்டு வந்ததுடன் வர்த்தகர்களும் கடையடைப்பு நடாத்த வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இன்று வடக்கு மாகாண முதல்வருடன் கொழும்பிலிருந்து சென்றிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் உயர் மட்ட குழுவினர் பேச்சு வார்த்தை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்

இந்த பேச்சுவார்த்தையின் இறுதி முடிவாக இலங்கை போக்குவரத்து சபை பேருந்துக்கள் ,தனியார் பேருந்துக்கள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் உள்ளூர் சேவைகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பித்து பழைய பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றல் வேண்டும் என இந்த பேச்சு வார்த்தையில் தீர்மானம் எடுக்கப்பட்டதையடுத்து வவுனியா இ.போ.ச சாலையினர் 3வது நாளாக தொடர்ந்த பணி பகிஷ்கரிப்பினை கைவிட்டு வழமைக்கு திரும்பினர்

இதனால் சில நாட்களாக வவுனியாவில் இருந்த பதட்டமான சூழ்நிலை முடிவுக்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

2380 Total Views 2 Views Today
  • 146
  •  
  •  
  •  
  •  
    146
    Shares

Comments

comments