கிளிநொச்சி – மாங்குளம் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து மாங்குளம்- கொக்காவில் ஏ9 வீதியில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. விபத்தில்
படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ்ரக வாகனம் ஒன்று, நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில்,யாழ். அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த நவரத்தினம் அருண் (வயது 24), சந்திரசேகரம் ஜெயசந்திரன் (வயது 36),யாழ்.மாலு சந்தி பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியம் இந்துகன் (வயது 19) யாழ். பருத்திதுறையை சேர்ந்த சின்னத்துரை கிருஸ்ணரூபன் (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.மேலும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பி.துவாரகன் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image may contain: outdoorImage may contain: one or more people and shoesImage may contain: one or more peopleImage may contain: one or more peopleNo automatic alt text available.Image may contain: 1 personImage may contain: 4 people, text

2967 Total Views 5 Views Today
  • 132
  •  
  •  
  •  
  •  
    132
    Shares

Comments

comments