இலங்­கைக்கு சுற்­று­லா­வுக்கு வந்த சுவிற்சர்­லாந்­தைச் சேர்ந்த இளம்­பெண் பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக முறைப்­பாடு கிடைத்­துள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

நுவ­ரெ­லி­யா­வுக்கு இளம்­பெண் சுற்­று­லாப் பய­ணம்
மேற்­கொண்­டி­ருந்த போது நேற்று முன்­தி­னம் இந்­தச் சம்­ப­வம் நடை­பெற்­றுள்­ளது.

நுவ­ரெ­லி­யா­வில் அமைந்­துள்ள சிங்­கல்ட்ரீ வனப்­ப­கு­திக்கு தனி­யாக சென்ற போதே
இளம்­பெண்ணை நப­ரொ­ரு­வர் பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளார்.
வனத்­தி­லி­ருந்து திரும்­பிய சுவிஸ் இளம்­பெண் தான் தங்­கி­யி­ருந்த விடு­தி­யின்
முகா­மை­யா­ள­ ருக்கு தக­வல் தெரி­வித்­துள்­ளார். விடுதி முகா­மை­யா­ள­ரால்
பொலி­ஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்டது.

பாதிக்­கப்­பட்ட இளம்­பெண் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.
சம்­ப­வத்­தை­ய­டுத்து விரைந்து செயற்­பட்ட பொலி­ஸார், அந்த மலைப் பகு­தி­யி­லுள்ள
ஸ்காப் தோட்­டத்­தைச் சுற்­றி­வ­ளைத்து, சந்­தே­கத்­தின் பேரில் 11 பேரை கைது செய்தனர்.

397 Total Views 1 Views Today
  • 24
  •  
  •  
  •  
  •  
    24
    Shares

Comments

comments