கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

தனது பகுதி நேர வகுப்புக்களை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த  சாதாரண தரத்தில் கல்வி பயிலும் முழங்காவில் பகுதியை சேர்ந்த மாணவன் மீது கனரக வாகனம் தடம்புரண்டதிலேயே  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு மாணவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

823 Total Views 3 Views Today
  • 54
  •  
  •  
  •  
  •  
    54
    Shares

Comments

comments