இவனைப் பிடிப்பதற்கு தயவு செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் திருட்டு, கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றசாட்டில் நீதிமன்றால் விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் தப்பி ஓடியுள்ளார்.

 

அவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலை அலுவலர்களால் யாழ்ப்பாணம் நீதிமன்றில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முற்படுத்திய பின் விளக்கமறியலில் வைக்க முற்பட்ட சமயம் நீதிமன்றில் இருந்து தப்பி சென்றிருந்தார். அவர் தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்” பொலிஸார் கூறினர்.
இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸார் அறிவித்தனர்.

“இந்த படத்தில் உள்ள நபரே தேடப்படுகிறார். தப்பி சென்று தற்போது ஒழித்து வாழும் இந்த நபர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்.

இவருடைய பெயர் அன்ரன் ஜெபராசா தயானந்தன். புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தைச சேர்ந்தவர். இவர் தற்போது இருக்கும் தகவல் தெரிந்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவே தகவல் வழங்க முடியும். சரியான தகவல் வழங்குபவர்களுக்கு சிறந்த சன்மானம் வழங்கப்படும்” என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

521 Total Views 2 Views Today
  • 37
  •  
  •  
  •  
  •  
    37
    Shares

Comments

comments