பாராளுமன்ற அமர்வில் பிரதமர் ரணில் மீது துரத்தித் துரத்தி தாக்குதல்!! (Video)

இன்றைய பாராளுமன்ற அமர்வுகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றிய வேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தின் நடுப் பகுதிக்கு வந்து, அமளியில் ஈடுபட்டதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற மத்தியில் கூடிய அவர்கள் கள்ளன் கள்ளன் வங்கிக் கள்ளன், ரணில் கள்ளன்.. போன்ற கூச்சல்களை எழுப்பினர்.

மேலும் இவர்கள் சில பதாகைகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை, இச் சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தில் சிறு கைகலப்பும் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

அத்துடன், அமைச்சர் ஒருவர் தகாத வார்த்தைகளை இதன்போது பிரயோகித்ததாகவும் தெரியவந்துள்ளது.

ஆளும்கட்சி மற்றும் ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்களே இவ்வாறு முரண்பாட்டில் ஈடுபட்டதோடு, இதனைத் தடுக்க பிரதமர் தலையிட்டுள்ளார்.

இந்தநிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் சொய்சா சிறு காயங்களுக்கு உள்ளானதோடு, அவருக்கு பாராளுமன்ற வளாகத்தில் சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாராளுமன்றத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

418 Total Views 1 Views Today
  • 19
  •  
  •  
  •  
  •  
    19
    Shares

Comments

comments