பெங்களூரில் இளம் பெண் ஒருவர் எனக்கு முஸ்லீம்களை பிடிக்கும் என்று கூறியது அவரது உயிர் போவதற்கு காரணமாகியுள்ளது.

சிக்மகளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தன்யாஸ்ரீ (20), இவருக்கு சந்தோஷ் என்ற நண்பர் உள்ளார்.

இவர்கள் இருவரும் வாட்ஸ் அப்பில் தங்கள் மாவட்டத்தில் நிலவும் மதக் கலவரங்களைப் பற்றி பேசியுள்ளனர்.அப்போது தன்யாஸ்ரீ இது போன்ற கலவரங்கள் எல்லாம் நல்லது கிடையாது என்று கூறியுள்ளார். அதற்கு சந்தோஷ், அதுபோன்ற நிலை இருப்பது நல்லதுதான், இல்லையெனில் லவ் ஜிகாத் அதிகமாகிவிடும் என்று கூறியுள்ளார்.

உடனடியாக தன்யாஸ்ரீ எனக்கு முஸ்லிம்களை பிடிக்கும் என பதில் தெரிவித்ததால், சந்தோஷ் இப்படியெல்லாம் இருக்க கூடாது, நீயும் லவ்ஜிகாத்திற்குள் தள்ளப்படுவாய் என குறிப்பிட்டுள்ளார்.அதுமட்டுமின்றி அவர் அந்த பெண் கூறியதை, அவர் ஸ்கிரீன் சாட் எடுத்து, தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.

இதைக் கண்ட சிலர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளனர். அதிலும் குறிப்பாக பாஜக இளைஞர் பிரிவு தலைவர் அனில்ராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட கும்பல் கடுமையாக திட்டியதாகவும், இனிமேல் இது போன்று இருக்கக் கூடாது என்று அட்வைசும் பண்ணியுள்ளனர்.

இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை, தன்யாஸ்ரீ படத்தையும் வேறு மதத்தை சேர்ந்தவர் படத்தையும், இணைத்து மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.இதைக் கண்டு பெரிது மன உளைச்சலுக்காளான தன்யாஸ்ரீ வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, அவரது வீட்டில் ஒரு கடிதம் சிக்கியுள்ளது. அதில் தன்யா, தன்னை மிரட்டியதாலும், போட்டோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாலும் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும், என்னுடைய தற்கொலைக்கு காரணமான அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

125 Total Views 1 Views Today
  • 7
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

Comments

comments