இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பல்வேறு குற்றவாளிகள் மற்றும் பாலியல் வல்லுறவுச் சம்பங்களுடன் தொடர்புடைய பலர் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இம்முறை தேர்தல் தொடர்பில் 243 சம்பவங்கள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலான 287 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இந்த முறைப்பாடுகளில் அதிகமான முறைப்பாடுகள் அரசியல் நோக்கங்களை கொண்ட விருந்துகள் மற்றும் சட்டவிரோத பிரசாரங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவும் பொலிஸாரும் இந்த நிலைமையை குறைக்க மிகப் பெரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் எனவும் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்

 

இதேவேளை

வவுனியா மாவட்டத்திலும் ஒரு சில குற்றவாளிகள் பிரதான கட்சிகளில் தேர்தலில் களம் இறங்கியுள்ளதாக அறியப்படுகிறது குறிப்பாக செட்டிகுளம் பிரதேச சபைக்கு பிரதான தமிழ் கட்சி ஒன்றில் களம் இறங்கியுள்ள வேட்பாளர் ஒருவர் கடந்த 1998 கால பகுதிகளில் அவர் பணியாற்றிய அரச காரியாலயத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு பல வருடங்களாக பொலிஸாரினால் தேடப்பட்ட நபர் என்பதுடன் இவர் திருடிய மோட்டார் சைக்கிளை 2005 காலப்பகுதியில் அநுராதபுரம் பகுதியில் பொலிஸார் மீட்டெடுத்திருந்தனர் ஆனாலும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் குறித்த நபர் மீது எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் இதே கட்சியின் வவுனியா நகரசபை வேட்பாளராக களம் இறக்கியுள்ள வேட்பாளர் ஒருவர் மீதும் வவுனியா தலமை பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாடுகள் உள்ளதுடன் நீதிமன்றம் வரை சென்று பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளவர் என்பதும் குறிபிடத்தக்கது

2299 Total Views 17 Views Today
  • 106
  •  
  •  
  •  
  •  
    106
    Shares

Comments

comments