உள்ளூராட்சி சபை தேர்தல் 2018 வவுனியா நகரசபை கடைத்தெருத் தொகுதிக்குரிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகம் நேற்று 2018.01.17 மாலை 5.00 மணியளவில் ப.உதயராசா அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

ஸ்ரீ ரெலோ கட்சி ஊடாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிடும் லோஜினி இந்திரசித் மற்றும் அன்ற்னி றெக்ஸன் ஆகியோரின் கட்சி காரியாலயம் கற்குழி கிராமத்தில் சிறீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்களினால் துறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய ப.உதயராசா அவர்கள் இந்த உள்ளூராட்சி தேர்தலானது எங்களை நாங்களே ஆளும் தேர்தல் எனவும் உங்கள் கிராமத்திலிருந்து உங்களில் ஒருவரை நீங்கள் நகரசபைக்கு தெரிவு செய்தால் உங்கள் நகரின் அபிவிருத்திக்கும் உங்கள் நகரின் தேவைகளுக்கும் நீங்களே தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த தேர்தலானது உங்கள் பகுதியின் அபிவிருத்திக்குறிய தேர்தலே தவிர இந்த தேர்தல் மூலம் சர்வதேசத்திற்கு ஓர் செய்தியோ அல்லது தேசியத்துக்கான தேர்தலோ இல்லை அவ்வாறு இந்த தேர்தல் அப்படி ஒரு செய்தியை வழங்க கூடிய தேர்தல் என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் ஐயா தனது பதவியை இராஜினாம செய்து விட்டு உள்ளூராட்சி தேர்தலை கேட்கலாம் தானே என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் உங்கள் நம்பிக்கையுடன் கை சின்னத்திற்கு புள்ளடியிட்டு உங்கள் வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் உங்கள் நகரின் அபிவிருத்தியை நீங்களே தீர்மாணிக்க முடியும் என தெரிவித்திருந்தார்

968 Total Views 17 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments