வவுனியாவிற்கு Night club வேனும் என்று கூறுகிறார் ஜக்சன்

வடமாகாணத்தின் கேந்திர நிலையமாக விளங்கும் வவுனியா மாவட்டத்தில் பல் இன மக்களும் ஒற்றுமையுடனும் தத்தமது கலாசாரத்துடனும் வாழ்ந்து வருகின்றனர் இதனிடையில் வவுனியாவில் தன்னை ஒரு கண்டு பிடிப்பாளர் என காட்டிக்கொள்ளும் வவுனியா ஜாக்சன் என்பவர் தமது முகநூலில் வவுனியாவிற்கு இரவு நேர களியாட்ட நிலையம் தேவை என்றும் அத்துடன் காதலிப்போருக்கு அரசு 5000 ரூபாய் மாணியம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது வவுனியாவில் பெரும் சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளது

கடந்த காலங்களில் வவுனியாவில் மசாஜ் நிலையங்களை மக்களின் எதிர்ப்பாலும் நகரசபை செயலாளரின் அதிரடி நடவடிக்கையினாலும் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட வவுனியாவிற்கு மதபோதகர் என்றும் கண்டுபிடிப்பாளர் என்றும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஜக்சன் என்பவர் தனது முகநூலில் வவுனியாவிற்கு இரவு நேர களியாட்ட விடுதி தேவை என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை உண்டுபன்னியுள்ளதுடன் சமூக வலைதலங்களில் இவர் மீது கடும் விமர்சனங்களையும் பதிவேற்றி வருகின்றனர்

கடந்த காலங்களில் வவுனியாவில் பல கண்டு பிடிப்புக்களை கண்டு பிடித்துள்ளதாக கூறியிருந்தார் என்பதுடன் இதுவரையில் பொதுமக்களின் பார்வைக்கு எதையும் காட்டியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

1872 Total Views 13 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments