பெண் வேட்பாளர் ஒருவரை அவதூறு பரப்பி தேர்தல் பிரச்சாரம் இடம்பெற்றதையடுத்து குறித்த பெண் வைத்தியசாலையில் மாரடைப்பு  காரணமாக அனுமதி

தன்னை அவதூறு பரப்பி சிலர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதால் மன அழுத்தத்திற்குட்பட்டு மாரடைப்பு ஏற்பட்டதாக குறித்த வேட்பாளர் தெரிவித்துள்ளார்

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியாவில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் ஸ்ரீரெலோ கட்சியின் நகரசபை வேட்பாளரான இந்திரசித்தன் லோஜினி என்ற பெண் வேட்பாளரை ஏனைய சில கட்சிகளின் வேட்பாளர்கள் பொய்யான அவதூறுகளை பரப்பியும் பொய்ப்பிரச்சாரம் மேற்கொண்ட காரணத்தினால் குறித்த பெண் வெட்பாளர் கடும் மன அழுத்தத்திற்குள்ளாகி மாரடைப்பு ஏற்பட்டுள்ளதுடன் நேற்று முன்தினம்  மாலை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியும், பிரதமரும் தேர்தல் ஆனையாளரும்  பெண் வேட்பாளர்களைத்தாக்கிப்பிரச்சாரம் மேற்கொள்ளத்தடை விதிக்கப்பட்டபோதிலும் சில வேட்பாளர்கள் பல இவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றனர் இதனை ஏற்றுக்கொள்ள முடியாத குறித்த பெண் வேட்பாளருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதுடன் தற்பொழுது வவுனியா பொது வைத்தியசாலையின்  அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக அறியப்படுகிறது

குறித்த பெண் வேட்பாளர் கற்குழி கிராமத்தில் பல சமூக சேவைகளில் ஈடுப்பட்டு வந்தவர் என்பதுடன் ஆலயபரிபாலன சபையிலும் தமது பல பங்களிப்புகளை கடந்த காலங்களில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

2813 Total Views 19 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments