கோவிலில் வாயில்படி இருந்தால், அதை
பெரும்பாலான பக்தர்கள் தொட்டு
கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள்.

வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட
வேண்டும்?

இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.

ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில் அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது.

அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய
நாடியை இயக்குகிறது.

படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது
வைத்து அழுத்த வேண்டும்.

இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும்.

அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும்.

எனவே அடுத்த தடவை கோவிலுக்கு
செல்லும் போது படிகளை வலது கையால்
தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று
அழுத்தம் கொடுத்துப் பாருங்கள்…

அது உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும்.

336 Total Views 10 Views Today
  • 25
  •  
  •  
  •  
  •  
    25
    Shares

Comments

comments