தென்னிந்தியாவில் முன்னணி நடிகையான தமன்னா மீது செருப்பு வீசப்பட்டது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இன்று ஹைதராபாத்தில் ஒரு புதிய நகைக்கடையை திறக்க அவர் சென்றிருந்தார். அப்போது அவரை காண மக்கள் கூட்டம் கடல் போல கூடியிருந்தது.

தமன்னா தன் காரில் இருந்து கீழே இறங்கி சில ரசிகர்களோடு செல்ஃபி எடுத்துள்ளார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் அவர் மீது செருப்பை வீசியுள்ளார். அது தமன்னா மீது படாமல் அருகில் இருந்த பாதுகாவலர் மீது விழுந்தது.

சுதாரித்து கொண்ட பாதுகாவலர்கள் அவ்வளவு பெரிய கூட்டத்தில் யார் செருப்பு இல்லாமல் உள்ளார் என பார்த்து செருப்பு எறிந்தவரை பிடித்துள்ளனர்.

விசாரித்ததில் அவர் முஷீராபாத்தை சேர்ந்த கரிமுல்லா என்பது தெரியவந்தது. சமீபகாலங்களில் தமன்னா தெலுங்கில் சரியாக நடிக்காததால் தான் அவர் மீது செருப்பு வீசியதாக கூறியுள்ளார்

192 Total Views 5 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments