தானே மாவட்டம் பிவண்டி மான்கோலி கிராமத்தை சேர்ந்தவர் பிரேந்திரகுமார். இவருக்கும் மம்தா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 1 வயதில் மகன் உள்ளான்.

இந்நிலையில் மம்தாவுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த ராகேஷ் என்ற வாலிபருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இவர்களுக்கு நெருக்கம் அதிகமானதால் மம்தா தனது கணவன் மற்றும் தனது குழந்தையை தவிக்க விட்டு விட்டு ராகேஷ் உடன் சென்று வாழதொடங்கியுள்ளார்.

இதனையடுத்து பிரேந்திரகுமாரின் மகன் ஒரு நாள் காணமால் போயுள்ளார். அப்போது பிரேந்திரகுமாருக்கு தனது மனைவி மம்தா மற்றும் அவரது கள்ள காதலன் மீது சந்தேகம் வந்துள்ளது.

இதனால் பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் மம்தா மற்றும் ராகேஷ்யை கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியது.

உன் கணவர் வசிக்கும் பகுதியிலேயே மீண்டும் நாம் வசிப்பதால் உன் குழந்தையால் பின்னாளில் பிரச்சினை வரும் என்று ராகேஷ் மம்தாவிடம் கூறியுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து பிரேந்திரகுமார் மகனை கொள்ள திட்டம் தீட்டியுள்ளனர்.

பின்னர் ஒரு நாள் பிரேந்திரகுமார் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவரது மகனை தூக்கிய மம்தா கள்ளகாதலுடன் சேர்ந்து தான் பெற்ற மகன் என்று கூட பார்க்காமல் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக பொலிசாரின் விசாரணையில் கூறினர்.

இதையடுத்து பொலிசார் மம்தாவையும் அவரது கள்ள காதலன் ராகேசையும் கைது செய்துள்ளனர்.

417 Total Views 8 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments