மருத்துவரும், 17 வயது சிறுமியும் நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் காந்தி (61). இவர் மனைவி ஈஸ்வரி. தம்பதிக்கு மனோஜ் (32) என்ற மகன் உள்ளார்.

மனோஜ் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.

மனோஜின் அக்காள் வனிதா. இவர், தனது கணவர் குமார் மற்றும் 17 வயது மகளுடன் மதுரையில் வசித்து வருகிறார்.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் திடீரென மனோஜும், 17 வயது சிறுமியும் மாயமாகி விட்டனர்.

சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத நிலையில் இருவரும் திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து காந்தியும், ஈஸ்வரியும் ஆசிரமத்துக்கு சென்று தங்களது மகன் மற்றும் பேத்தியை அனுப்புமாறு தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

ஆனால், மனோஜும், சிறுமியும் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ளதாக நிர்வாகிகள் கூறினார்கள்.

இதையடுத்து கதறியபடி பொலிசிடம் சென்ற சிறுமியின் குடும்பத்தார் கடத்தப்பட்ட சிறுமியை மீட்க கோர பொலிசார் ஆசிரமத்துக்கு சென்று இருவரையும் மீட்டார்கள்.

மனோஜ் மற்றும் சிறுமி இருவருமே காவி உடையில் இருந்த நிலையில் தங்களை யாரும் கடத்தவில்லை என வாக்குமூலம் அளித்துள்ளார்கள்

இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள்.

586 Total Views 16 Views Today
  • 20
  •  
  •  
  •  
  •  
    20
    Shares

Comments

comments