வவுனியா மாவட்ட செயலகத்தால் வெளியிடப்பட்ட வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கான தேர்தல் வட்டாரத்தின் விகிதாசாரத்துடன் கூடிய உத்தியோகபூர்வ முடிவுகள்.

நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கான வட்டார ரீதியான முடிவுகளின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 11296 வாக்குகளை பெற்று 11 ஆசனங்களைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளது.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 55005, அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 39969, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1005

இதன்படி சிறி லங்கா சுதந்திரக் கட்சி 7166 வாக்குகளை பெற்று 05 ஆசனங்களையும், தமிழர் விடுதலை கூட்டணி 5335 வாக்குகளை பெற்று 04 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 5836 வாக்குகளை பெற்று 04 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2116 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும், சிறி லங்கா பொதுஜன முன்னணி 1182 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும், ஈழமக்கள் ஜனநாயக கட்சி 2685 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும், சுயேட்சை குழு 2914 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும் வெற்றிபெற்றுள்ளது.

228 Total Views 8 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments