திருகோணமலை கோமரன்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை அழைத்துச் சென்ற நபரை இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் திருமதி சமிலா குமாரி ரத்நாயக்க நேற்று உத்தரவிட்டார்.

திரிகல்யாணபுர,கோமரன்கடவெல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் பதினைந்து வயதுடைய சிறுமியை காதலித்து வந்த நிலையிலே பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற போதே சிறுமியின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னீலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோமரங்கடவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

58 Total Views 1 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments