மாகாண சபை தேசிய எல்லை நிர்ணய குழு தயாரித்த அறிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சர்வகட்சி மகாநாடு நடத்தப்படவுள்ளது.

இதற்காக கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதற்கு மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் பைசல் முஸ்தபா தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகள் மற்றும் சிறிய அரசியல் கட்சிகளை பங்கு கொள்ளச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை கேட்டறிவதே இதன் நோக்கமாகும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய எல்லை நிர்ணய குழுவின் ஆரம்ப பேச்சுவார்த்தை எதிர்வரும் புதன்கிழமை நடைபெறும். இதில் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

216 Total Views 3 Views Today
  • 4
  •  
  •  
  •  
  •  
    4
    Shares

Comments

comments