உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்வரும் ஓரிரு நாட்களில் அரசாங்கத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் கலந்துகொண்ட விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதி இவ்விடயத்தைக் குறிப்பிட்டதாக அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மேலும், உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும் தெரிவித்துள்ளனர்.

393 Total Views 7 Views Today
  •  
  •  
  •  
  •  
  •  

Comments

comments