பெண்ணொருவருவடன் கள்ளத் தொடர்பை வைத்திருந்த ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் அரநாயக்க, பன்னல பிரதேசத்தில் நேற்றிரவு நடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கொல்லப்பட்ட நபர் தனது மனைவிக்கு தெரியாமல் இரவு வேளையில் வேறு ஒரு வீட்டுக்குள் சென்றுள்ளார்.

அந்த வீட்டில் இருந்த பெண் தனது கணவனுக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து விட்டு, கொல்லப்பட்ட நபருடன் ஒன்றாக இருந்துள்ளார்.

நித்திரையிலிருந்து விழித்த பெண்ணின் கணவர், இந்த சம்பவத்தை கண்டு ஆத்திரமடைந்து, கூரிய ஆயுதம் ஒன்றினால், நபரை தாக்கியதாகவும், இதனால் அந்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கொல்லப்பட்டவர் 42 வயதான நபர் எனவும் கடந்த 9 வருடங்களாக குறித்த பெண்ணுடன் தொடர்பை வைத்திருந்தாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் குறித்த பெண்ணும் காயமடைந்துள்ளதாகவும், தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் பெண் அரச வைத்தியசாலை ஒன்றில் தாதியாக பணியாற்றி வருவதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அரநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

7174 Total Views 5 Views Today